ஆசான்
உள்நுழை பெற்றோர் பதிவு

O/L கணிதம் இப்போது கிடைக்கிறது · தமிழ் மொழிமூலம்

கணிதத்தை நீங்களே தீருங்கள்.
ஆசான் படிப்படியாக வழிகாட்டும்.

இலங்கைப் பாடநூல் கேள்விகள், இலங்கைத் தமிழில் குறிப்புகள், கொப்பியில் எழுதிய தீர்வைப் படம் எடுத்துச் சரிபார்க்கும் AI ஆசிரியர். விடையைச் சொல்லாது – சிந்திக்க வைக்கும்.

பிள்ளையைப் பதிவு செய்யுங்கள் எப்படி இயங்குகிறது?

Northern College of Higher Studies, யாழ்ப்பாணம் வழங்கும் சேவை

சமன்பாடுகள் · கேள்வி 1

தீர்க்க: 4/a + 1/a = 5/3

பகுதிகள் ஒன்று என்பதால் 4 உம் 1 உம் கூட்டலாமா?
ஆசான் AIஆம்! பகுதிகள் சமம் என்பதால் தொகுதிகளை நேரடியாகக் கூட்டலாம். 4 + 1 என்ன வருகிறது?
5/a = 5/3 so a = 3 ஆ?
ஆசான்சரியான விடை! a = 3. சரிபார்ப்பு: 4/3 + 1/3 = 5/3 ✓

தமிழ் மொழிமூலம்

இலங்கைப் பாடநூல் சொற்கள்

24 மணி நேரமும்

வீட்டிலிருந்தே கேள்வி கேட்கலாம்

தமிழ் · Tanglish · English

எப்படி எழுதினாலும் புரியும்

எப்படி இயங்குகிறது?

ஒரு நல்ல ஆசிரியர் பக்கத்தில் இருந்து வழிகாட்டுவது போலவே – ஆனால் எந்த நேரத்திலும்.

1

கேள்வியைத் தெரிவுசெய்யுங்கள்

பாடநூல் அலகுகளிலிருந்து கேள்விகள் – எளிது முதல் கடினம் வரை.

2

உங்கள் படியை எழுதுங்கள்

Type செய்யுங்கள், அல்லது கொப்பியில் எழுதிப் படம் எடுத்து அனுப்புங்கள்.

3

ஆசான் சரிபார்க்கும்

ஒவ்வொரு படியும் சரிபார்க்கப்படும். பிழை இருந்தால் ஒரு கேள்வி கேட்டுச் சிந்திக்க வைக்கும்.

4

விடையை நீங்களே காணுங்கள்

சிக்கினால் குறிப்பு. விடையை நீங்களே கண்டுபிடிக்கும் வரை ஆசான் சொல்லாது.

பாடநெறிகள்

O/L கணிதத்துடன் தொடங்குகிறோம். மேலும் பல பாடநெறிகள் விரைவில் வருகின்றன.

இப்போது கிடைக்கிறது

O/L கணிதம்

தரம் 10–11 · தமிழ் மொழிமூலம் · AI ஆசிரியர், கொப்பிப் படச் சரிபார்ப்பு, ஆசிரியர் கண்காணிப்பு

பதிவு செய்யுங்கள்

விரைவில்

O/L விஞ்ஞானம்

தரம் 10–11 · தமிழ் மொழிமூலம்

விரைவில்

O/L ஆங்கிலம்

வாசிப்பு, எழுத்து, இலக்கணம்

விரைவில்

தரம் 5 புலமைப்பரிசில்

பரீட்சைக்கான பயிற்சிக் கேள்விகள்

விரைவில்

A/L பாடங்கள்

தமிழ் மொழிமூல உயர்தர மாணவர்களுக்கு

விரைவில்

ஆசான் English (IELTS)

Writing, Speaking பயிற்சி – AI மதிப்பீட்டுடன்

விரைவில்

சிங்களம் / தமிழ் இரண்டாம் மொழி

அரச ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும்

விரைவில்

வெளிநாட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்

தமிழ் பேச, வாசிக்க, எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் – உலகெங்கும் உள்ள தமிழ்க் குடும்பங்களுக்கு

ஏன் ஆசான்?

இலங்கைப் பாடநூலுக்கு ஏற்ப

பாடநூல் கேள்விகள், அதே சொற்கள் – பெறுமானம், சோடி போன்ற இலங்கைத் தமிழில்.

கொப்பிப் படச் சரிபார்ப்பு

கையால் எழுதிய தீர்வைப் படம் எடுத்தால், ஒவ்வொரு வரியையும் வாசித்துச் சரிபார்க்கும்.

விடையைச் சொல்லாது

பிள்ளை தானே சிந்தித்துக் கற்கும்படி கேள்விகளாலும் குறிப்புகளாலும் வழிகாட்டும்.

ஆசிரியர்கள் கண்காணிக்கலாம்

ஒவ்வொரு பிள்ளையின் முன்னேற்றமும், வகுப்பின் பொதுவான பிழைகளும் ஆசிரியருக்குத் தெரியும்.

Phone இலேயே போதும்

App தரவிறக்கம் தேவையில்லை. myaasaan.com ஐத் திறந்து Home Screen இல் சேர்த்தால் போதும்.

பாதுகாப்பானது

பிள்ளைக்குத் தொலைபேசி இலக்கமோ email ஓ தேவையில்லை. பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே.

பெற்றோருக்கு

பிள்ளை வீட்டில் கணக்குச் செய்யும்போது சிக்கினால், ஆசான் உடனே வழிகாட்டும். நீங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தை உங்கள் phone இலேயே பார்க்கலாம்.

✓பெற்றோர் பதிவு செய்து, சம்மதம் தந்த பின்பே பிள்ளை பயன்படுத்தலாம்

✓பிள்ளை வகுப்புக் குறியீடும் 4 இலக்க PIN உம் கொண்டு மட்டும் உள்நுழையும்

✓கணிதக் கேள்விகளுக்கு மட்டுமே – வேறு உரையாடல் இல்லை

✓எந்த நேரத்திலும் கணக்கையும் தரவையும் நீக்கலாம்

பதிவு செய்வது எப்படி

  1. myaasaan.com இல் "பெற்றோர் பதிவு" அழுத்துங்கள்
  2. உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம், கடவுச்சொல்
  3. பிள்ளையின் பெயரைச் சேர்த்து, சம்மதம் தாருங்கள்
  4. பிள்ளைக்கான குறியீடும் PIN உம் உடனே கிடைக்கும்
பெற்றோர் பதிவு

ஆசிரியர்களுக்கு

உங்கள் வகுப்புப் பிள்ளைகளை ஆசானில் சேர்த்து, வீட்டுப் பயிற்சியில் அவர்கள் எங்கே சிக்குகிறார்கள் என்று பாருங்கள். வகுப்புகளை நீங்களே உருவாக்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் குறியீடு + PIN அட்டைகளை print செய்யலாம்.

பதிவு செய்த பின், அலுவலகம் உறுதிசெய்து அனுமதி தரும். பதிவு செய்ய முன் ஆசிரியர் வழிகாட்டியை (PDF) வாசியுங்கள்.

ஆசிரியர் பதிவு ஆசிரியர் உள்நுழைவு

விலை

குறைந்த மாதச் சந்தா. விலை விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இலங்கை மாணவர்கள்

O/L கணிதம் · மாதச் சந்தா

விலை விரைவில்

ஒவ்வொரு நாளும் AI ஆசிரியர் உதவி · கொப்பிப் படச் சரிபார்ப்பு · பெற்றோர் முன்னேற்ற அறிக்கை

வெளிநாட்டுப் பிள்ளைகள்

தமிழ் கற்கும் பாடநெறி

விலை விரைவில்

தமிழ் பேச, வாசிக்க, எழுத – வீட்டிலிருந்தே

பாடசாலைகள் / கல்வி நிலையங்கள்

வகுப்புகளுக்கான உரிமம்

தொடர்புகொள்ளுங்கள்

ஆசிரியர் கண்காணிப்புப் பகுதி · வகுப்பு அறிக்கைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆசான் விடையை நேரடியாகச் சொல்லுமா?

இல்லை. பிள்ளை தானே சிந்தித்துக் கற்கும்படி குறிப்புகளும் கேள்விகளும் தரும். பல முறை முயன்ற பின், அடுத்த ஒரு படியை மட்டும் செய்து காட்டும்.

Tuition வகுப்புக்குப் பதிலாகவா?

இல்லை – துணையாக. வகுப்பில் கற்றதை வீட்டில் பயிற்சி செய்யும்போது சிக்கினால் ஆசான் உதவும். ஆசிரியர்களும் தம் வகுப்புகளுக்கு ஆசானைப் பயன்படுத்தலாம்.

எந்த phone இல் வேலை செய்யும்?

Android, iPhone இரண்டிலும், browser மூலம். App தரவிறக்கம் தேவையில்லை. Play Store app விரைவில்.

பிள்ளை தமிழில்தான் எழுத வேண்டுமா?

தமிழ், Tanglish, English – எதில் எழுதினாலும் ஆசான் புரிந்துகொண்டு எளிய தமிழில் பதில் தரும்.

பிள்ளையின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளனவா?

ஆம். பிள்ளையின் தொலைபேசி இலக்கமோ email ஓ சேகரிக்கப்படுவதில்லை. பெற்றோர் எந்த நேரத்திலும் கணக்கை நீக்கலாம்.